අවශ්ය අමුද්රව්ය:
- සිහින්ව ලියාගත් ළපටි දඹල
තෙල් ස්වල්පයකින් බැදගන කැබලි කරගත් හාල්මැස්සන් ස්වල්පයක්
හීන්වට ලියාගත් කුඩා ලොකු ළූණු ගෙඩි දෙකක් සහා මාළු මිරිස් කරල් දෙකක්
පොල් ස්වල්පයක්
දෙහි ගෙඩියක ඇඹුල්
ලුනු සහා ගම්මිරිස් කුඩු ස්වල්පයක්
සාදාගන්නා ආකාරය:
අද අරන් ආවෙ පෝෂණ ගුණයෙන් ඉහළ සම්බෝලයක්. දඹලවලට ලුණු ස්වල්පයක් සහා ගම්මිරිස් කුඩු ස්වල්පයක් සහා දෙහි ගෙඩියෙන් භාගයක ඇඹුල් දමා අනාගෙන පසකින් තබන්න.
පොල්වලට ලුණු, ගම්මිරිස්, ලූණු, මාළු මිරිස්, දෙහි ඇඹුල් දමා හොඳින් අනාගන්න.
ඉන්පසු අනාගත් දඹල මිශ්රණය, පොල් මිශ්රණයට එක්කර හොඳින් අනාගන්න. ආවසානයේ කැබලි කරගත් බැදපු හාල් මැස්සන් එක් කරගෙන ලිහිල්ව මිශ්ර කරගන්න.
දඹල කියන්නෙ ප්රෝටීන් බහුල එළවලුවක්නෙ. මේ සම්බෝලෙට වියලි හාල්මැස්සනුත් එකතු කරලා සත්ව ප්රෝටීනුත් එක් කරලා, ශරීරයට අවශ්ය ඇමයිනෝ අම්ල පරාසයම ලබාදෙන්න උත්සහා කරලා තියෙන්නෙ.
ඒ වගේම හාල්මැස්සන්ගෙන් මේ සම්බෝලෙන් ලැබෙන කැල්සියම්, ෆොස්පරස් සහා යකඩ යන ඛනිජ ලවණ ප්රමාණයත් වැඩිකරනවා. ඊට අමතරව ළූණුවලින් ප්රතිඔක්සිකාරකත්, මාළු මිරිස් සහා දෙහි ඇඹුල්වලින් විටමින් Cත්, පොල්වලින් තන්තු, ප්රෝටීන සහා අත්යාවශ්ය මේද අම්ලත් ලැබෙනවා.
ඒ නිසා මේ සම්බෝලෙ අඩු වියදමකින් සාදාගන්න පුළුවන් පෝෂණ ගුණයෙන් අනූන වෑංජනයක්. දඹල අමුවෙන් තියෙන නිසාත්, පොල් සම්පූර්ණ ලෙස තියෙන නිසත් කිසිම පෝෂ්ය ද්රව්යයක් අපතේ නොයා වැඩි කාර්යාක්ෂමතාවකින් ලබාගන්න පුළුවන්. ඒ නිසා ඇත්තටම මේකත් එක්ක විතරක් බත් කෑවත් දවසේ අවශ්ය පෝෂණ ගුණයෙන් සැළකිය යුතු ප්රමාණයක් ආවරණය කරගන්න පුළුවන්.
தேவையான பொருட்கள்:
- சிறிதாக வெட்டிய இளம் சிறகவரை
சிறிது எண்ணெயில் பொரித்த சில நெத்தலிகள்
இரண்டு சிறிய வெங்காயம் மற்றும் இரண்டு கறிமிளகாய், பொடியாக நறுக்கியது
சிறிது தேங்காய்
புளிப்புக்கு எலுமிச்சை
ஒரு சிட்டிகை உப்பு மற்றும் மிளகு தூள்
செய்முறை:
இன்று மிகவும் சத்தான சம்பல் ஒன்றைக் கொண்டு வந்துள்ளோம். சிறகவரைக்கு சிறிது உப்பு, சிறிது மிளகுத் தூள், அரை எலுமிச்சை சாறு சேர்த்துப் பிசைந்து, தனியாக வைக்கவும்.
தேங்காயுடன் உப்பு, மிளகு, வெங்காயம், கறிமிளகாய், எலுமிச்சை சாறு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு பிசையவும்.
பின்னர் தேங்காய் கலவையுடன்பிசைந்து வைத்திருந்த சிறகவரை சேர்த்து நன்கு பிசையவும். இறுதியாக, நறுக்கிய பொரித்த நெத்தலியை சேர்த்து லேசாகக் கலக்கவும்.
சிறகவரை புரதம் நிறைந்த ஒரு காய்கறி. இந்த சம்பல் உலர்ந்த நெத்தலி மற்றும் விலங்கு புரதத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது, இது உடலுக்குத் தேவையான முழு அளவிலான அமினோ அமிலங்களையும் வழங்கும் முயற்சியாகும்.
மேலும், இந்த நெத்தலி சேர்த்து தயாரித்த சம்பலில் காணப்படும் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு ஆகிய தாதுக்களும் அதிகரிக்கின்றன. கூடுதலாக, வெங்காயம் ஆக்ஸிஜனேற்றிகளையும், கறிமிளகாய் மற்றும் எலுமிச்சை சாறு வைட்டமின் சி யையும், தேங்காய் நார்ச்சத்து, புரதம் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களையும் வழங்குகிறது.
எனவே, இந்த சம்பல் குறைந்த செலவில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாகும். சிறகவரை பச்சையாக இருப்பதால், முழு தேங்காயில் காணப்படும் ஊட்டச்சத்துக்களை வீணாக்காமல் மிகவும் திறமையாகப் பெற முடியும். எனவே, நீங்கள் இதனுடன் மட்டும் சோறு சாப்பிட்டாலும், உங்கள் அன்றாட ஊட்டச்சத்து தேவைகளில் கணிசமான அளவைப் பூர்த்தி செய்ய முடியும்.
