වට්ටක්කා ජෑම් / பூசணி ஜாம்

අවශ්‍ය අමුද්‍රව්‍ය:
  • වට්ටක්කා (900g කින් සාමාන්‍ය ජෑම් බෝතලයක ප්‍රමාණයක් සෑදෙනවා)

  • සීනි (වට්ටක්කා කොටස් දෙකකට සීනි කොටස් දෙකයි – ඒ කියන්නෙ වට්ටක්කා 900g යකට, සීනි 600g)

  • කුරුඳු පොතු – (ඉවත් කරන්න අවශ්‍ය නිසා අඟල් 2කක පමණ කැබලි) – වට්ටක්කා 300g ට එවැනි කැබලි 2ක් පමණ

  • ඉඟුරු – වට්ටක්කා 300g ට අඟලක පමණ කැබැල්ලක්

  • ලෙමන් ගෙඩියක යුෂ සහා ලෙලි

  • වතුර

සාදාගන්නා ආකාරය:

සාමාන්‍යයෙන් ජෑම් හදන්නෙ පළතුරුවලින් වුනත් එළවළුවලිනුත් ජෑම් හදන්න පුළුවන්. ඉතින් අද අපි ගෙනාවෙත් එහෙම රෙසිපියක්.

වට්ටක්කා පොතු හැර 1cm පමණ කොටුවලට කපාගන්න. ඉක්මනින්ම පිසෙනවා සේම, එකම ප්‍රමාණයට පිසීමත් වැදගත් නිසා එලෙස කුඩාවට එකම ප්‍රමාණයට කපාගැනීම අවශ්‍යයි.

ඉන්පසු මැටි ඇතිලියක් හෝ නන් ස්ටික් පෑන් එකක් ගෙන කපාගත් වට්ටක්කා දමා වට්ටක්කා භාගෙට වැසෙන පරිදි (සම්පූර්ණයෙන් නොවේ) වතුර ස්වල්පයක් දමන්න. ඉන්පසු අනෙකුත් අමුද්‍රව්‍යත් (සීනි, කුරුඳු, ගාගත් ඉඟුරු, ලෙමන් යුෂ සහා ලෙලි) එක් කරන්න. ලෙමන් ලෙලි ඉවත් කරන බැවින් විශාල කැබලි ලෙස දමන්න.

ඉන්පසු ලිප තබා මද ගින්නේ පිසගන්න. තැම්බුන පසු ලී හැන්දකින් වට්ටක්කා කැබලි හොඳින් පොඩි කරගන්න. ලී හැන්දෙන් භාජනයේ පතුල පෙනෙන පරිදී ජෑම් මිශ්‍රණය පැහැදිළිව දෙපසට කර හැකි මට්ටමට පිසුණු පසු ලිපෙන් බාගෙන, උණුවෙන්ම පිරිසිදු බෝතලයකට දමාගන්න. මෙහිදී කුරුඳු සහා ලෙමන් ලෙලි ඉවත් කළ යුතුය. දිගු කාලයක් ගබඩා කිරීමට අවශ්‍ය නම් නටන වතුරේ බහා ජීවාණුහරණය කළ බෝතලයකට දමාගන්න.

වට්ටක්කා 900g කින් ලොකු ජෑම් බෝතලයක ප්‍රමාණයක් සෑදෙන අතර යන වියදම රුපියල් 200ක් පමණය. ඉතින් එක එක කෘතිම රසකාරක, වර්ණකාරක යෙදූ පළතුරක් පෙන්වාවත් නැති පුස් නිෂ්පාදන වැඩි මිලට ගන්නවාට වඩා ඔබත් මෙය නිවසේදී අත් හදා බලන්න. ජීවිතේ රස වැඩි කරගන්න

தேவையான பொருட்கள்:
  • பூசணி (900 கிராம் வழக்கமான ஜாம் பாட்டிலின் அளவை உருவாக்குகிறது)

  • சர்க்கரை (பூசணிக்காயின் 2/3 பாகங்கள் சர்க்கரை அதாவது 900 கிராம் பூசணி, 600 கிராம் சர்க்கரை)

  • இலவங்கப்பட்டை – (சுமார் 2 அங்குல துண்டுகள்) – 300 கிராம் பூசணிக்காய்க்கு 2 துண்டுகள் வீதம்.

  • இஞ்சி – 300 கிராம் பூசணிக்கு 1 அங்குல துண்டு

  • எலுமிச்சை பழச்சாறு மற்றும் தோல்

  • தண்ணீர்

செய்முறை:

பொதுவாக ஜாம் பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் ஆனால் காய்கறிகளிலிருந்தும் ஜாம் செய்யலாம். எனவே இன்று நாம் அத்தகைய செய்முறையை கொண்டு வந்துள்ளோம்.

பூசணிக்காயை தோலுரித்து 1 செமீ சதுரமாக வெட்டவும். இது வேக வைக்க மிக குறைந்த நேரம் எடுப்பதால், அதை சிறிய மற்றும் சீரான அளவுகளாக வெட்டுவது அவசியம்.

பிறகு ஒரு மண் சட்டி அல்லது நான்-ஸ்டிக் பான் எடுத்து அதில் வெட்டி வைத்துள்ள பூசணிக்காயை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து பூசணி பாதி மூடுமளவு (முழுமையாக இல்லை). பின்னர் மீதமுள்ள பொருட்கள் (சர்க்கரை, இலவங்கப்பட்டை, அரைத்த இஞ்சி, எலுமிச்சை சாறு மற்றும் தோல் ) சேர்க்கவும். எலுமிச்சையை பெரிய துண்டுகளாக வெட்டவும், அவற்றை பின்னர் அகற்ற இலகுவாக இருக்கும்.

பிறகு அடுப்பை சிம்மில் வைத்து மிதமான தீயில் வேக வைக்கவும். கொதித்ததும் பூசணிக்காய் துண்டுகளை மரக் கரண்டியால் நன்றாக மசிக்கவும். ஜாம் கலவைவை பாத்திரத்தின் அடிப்பகுதி தெரியும் வகையில் பசை போல கிளறி எடுக்கவும். இலவங்கப்பட்டை மற்றும் எலுமிச்சை தோலை அகற்றவும்.

சூடாக இருக்கும் போதே ஜாம் போத்தலில் நிரப்பவும். நீங்கள் நீண்ட காலம் சேமிக்க விரும்பினால், அதை ஒரு கொதிநீர் மூலம் கிருமி நீக்கம் செய்யப்பட்ட பாட்டிலில் வைக்கவும்.

900 கிராம் பூசணிக்காயில் ஒரு பெரிய ஜாம் பாட்டில் அளவு ஜாம் தயாரிக்கலாம், அதன் விலை சுமார் 200 ரூபாய். எனவே, செயற்கை சுவையூட்டிகள் மற்றும் வண்ணங்களைக் கொண்ட பொருட்களை வாங்குவதற்குப் பதிலாக, வீட்டிலேயே செய்யக்கூடிய இதை முயற்சிக்கவும் வாழ்க்கையில் சுவை சேர்க்க

Scroll to Top