தோல் நீக்கிய 7 ஆம்பரெல்லா காய்களுடன், ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு பிலெண்டரில் அரைத்து வடிகட்டினால் அம்பரெல்லா சாறு கிடைக்கும் (350ml). அதில் சுவைக்கேற்ப சர்க்கரை சேர்க்கவும். பின்னர் ஒரு மேசைக்கரண்டி ஜெலட்டின் சேர்த்து சுமார் 2 நிமிடம் சூடாக்கிய பின்னர் ஆறவிடவும். குளிரூட்டியில் வைத்து கெட்டியான பிறகு சாப்பிடவும்.