Lunch box – No 5

සාදාගන්නා ආකාරය:

සෙනසුරාදා කියන්නෙ අපි මොනාහරි විශේෂ දෙයක් හදන දවස. අද හැදුවෙ ඉස්සො. මන් මේ වගේ ලොකු ඉස්සො ගද්දි ගෙදර අය ඉන්න ගාණට ගැනලා තමයි ගන්නෙ. එක්කෙනෙක්ට තුන ගාණෙ ඉස්සො 12ක්… මෙතන තිබ්බෙ 300g. ගාණ රු. 460යි. මෙහෙම ගද්දි අනවශ්‍ය ප්‍රමාණයක් අරන්, අනවශ්‍ය වියදමක් දරන්න වෙන එක නවතිනවා.

එළවළු විදිහට තියෙන්නෙ ගෙවත්තෙන් කඩාගත්ත බණ්ඩක්කා වෑංජනයකුයි, ඊයෙ රෑට උයපු අලුකෙසෙල් මාළුවෙ පොතු අරන් තියලා ඒක තේල්දාලයි. බත් එකේ වර්ණවත් බව වැඩිවෙන්න තක්කාලි කපලා තිබ්බා. නිකම්ම… සම්බෝල හදනවා කියලා ළූණු අමු මිරිස් වැයකරන්න ඕනෙ නෑනෙ මෙච්චර අනිත් දේවල් තියෙද්දි. මේ තුනෙන් ඉතිම් වියදම් ගියෙ තක්කාලිවලට විතරයි. තක්කාලි වුනත් ගෙවත්තේ වවාගන්න පුළුවන්.

අතුරුපස විදිහට අලිගැටපේර සමඟ කිතුල් පැණි. (අතුරුපස කිව්වට ටිකක් පරක්කු වෙලා, අනිත් පන්තියට යන්න කළින් තමයි කෑවෙ. කෑම පෙට්ටියෙන් තිබ්බෙ ෆොටෝ ගන්න. නැත්නම් වෙනම ගෙනාවෙ ). අලිගැටපේරත් ටිකක් ගණන්. මේ මම අපේ වත්තෙ පතෝලවලට යාළුවෙක් එක්ක කරපු හුවමාරුවක්. අලිගැටපේරවල තියෙන පෝෂණ ගුණය එක්ක බලද්දී හැබැයි ඒක සල්ලි දීලා අරගෙන වුනත් කන්න පාඩු නැති පළතුරක්. ඒකෙ කැලරි අගයත් ඉහළ නිසා ඇත්තටම කුඩා දරුවෙක්ට උදෑසන ආහාරය සඳහා වුනත් දෙන්න පුළුවන්.

ඔයාලට බැලූ බැල්මට මේක වියදම් අධික කෑම වේලක් නිසා මන් පොඩ්ඩක් පැහැදිළි කරන්නම්. ගාණ හදලා බලද්දී මේ මුළු වේලටම ගියෙ එක්කෙනෙක්ට රුපියල් 200ක් වගේ.

செய்முறை:

சனிக்கிழமை என்பது நாம் ஏதாவது சிறப்பு உணவுகளை செய்யும் நாள். இன்று இறால் சமைக்கப்பட்டது. இப்படி பெரிய இறால் வாங்கும் போது என் குடும்பத்திற்கு தேவையான அளவை பார்த்தே  வாங்குவேன்.  ஒருவருக்கு மூன்று என்ற அடிப்படையில் 12 இறால்,  இங்கு 300 கிராம் உள்ளது. விலை ரூ. 460. இப்படிச் செய்வதன் மூலம், தேவையற்ற தொகையை எடுத்துக்கொள்வதையும், தேவையற்ற செலவுகளைச் செய்வதையும் தவிர்க்கலாம்.

காய்கறிகளாக, தோட்டத்தில் இருந்து பறித்த வெண்டைக்காய்  கறி, மற்றும் நேற்று இரவு சமைத்த வாழைக்காயில் இருந்து அகற்றிய தோலை சுண்டல் செய்தேன். சோற்றின்  நிறத்தை அழகுபடுத்த  தக்காளி வெட்டி வைக்கப்பது. சும்மா… சம்பல் செய்ய வேண்டும் என்று வெங்காயம், பச்சை மிளகாயை வீணாக்க தேவையில்லை. இந்த மூன்றில், தக்காளிக்கு மட்டுமே அதிக செலவு செய்யப்பட்டது. தக்காளி கூட வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம்.

டெசர்ட்க்கு  ஆணைக்கொய்யா  பழத்துடன் கித்துல் பாணி. (டெசர்ட் கொஞ்சம் லேட், மற்ற கிளாஸ் போறதுக்கு முன்னாடி சாப்பிட்டேன். உணவு பெட்டியில்  போட்டோ எடுக்க வச்சிருக்கேன்). ஆணைக்கொய்யா  பழமும் கொஞ்சம் அதிக விலை.இது எங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள புடலங்காயை ஒரு நண்பருடன் பகிர்ந்துகொண்டதால் கிடைத்தது. ஆணைக்கொய்யா  பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது அதற்கு அதிக பணம் கொடுத்தாலும் உண்ணத்  தகுந்த பழம்.  இதன் கலோரிக் மதிப்பு அதிகமாக இருப்பதால், காலை உணவாகக் கூட சிறு குழந்தைக்குக் கொடுக்கலாம்.

இதை பார்க்கும் போது  உங்களுக்கு  இது ஒரு விலையுயர்ந்த உணவாக தோன்றலாம். எனவே நான் கொஞ்சம் விளக்குகிறேன். இந்த உணவுக்கு ஒருவருக்கு 200 ரூபாய் மட்டுமே செலவானது.

Scroll to Top