සාදාගන්නා ආකාරය:
මඤ්ඤොක්කා කියන්නෙ ගෙවත්තෙන් වුනත් සපයගන්න පුළුවන් මිලෙන් අඩු කාබෝහයිඩ්රේට ප්රභවයක්. හොඳට කුස පිරෙනවා වගේම ප්රමාණවත් කැලරි ප්රමාණයකුත් ලැබෙනවා. මඤ්ඤොක්කාවල පෝෂණ ගුණය වැඩිකිරීම සඳහා අපිට මේවගේ ක්රමයක් භාවිතා කරන්න පුළුවන්.
පොල් ස්වල්පයකට ලියාපු අමුමිරිස් කරල් දෙකක්, කහ ස්වල්පයක් සහා ලුණු ස්වල්පයක් දමා අනාගන්න. පොල් මෙම ආහාර වේලට මේද අම්ල, තන්තු සහා කැලරි එකතු කරයි. පොල් කිරි භාවිතා කර පිසිනා හොද්දකදී මෙන් නොව, ගා ගත් පොල් භාවිතය නිසා ආහාර වේලට යන වියදම අඩු වන ගමන් ආහාරයේ තන්තු ප්රමාණය වැඩිවී මේද ප්රමාණය අඩු වේ.
තම්බපු මඤ්ඤොක්කා ඇතිළියකට ගෙන පොල් කටු හැන්දකින් පොඩි කරගන්න. ඉන්පසු හොඳින් සෝදාගත් කතුරුමුරුංගා කොළ අහුරක්ද එකතු කර ලිපේ තබා මද ගින්නේ හොඳින් මිශ්ර කරගන්න. කතුරුමුරුංගා කොළ මැළවුණු පසු ලිපෙන් බාගන්න. යකඩ, කැල්සියම් විතරක් නෙමෙයි ප්රෝටීන්වලිනුත් කතුරුමුරුංගා පොහොසත්. ඒ නිසා කතුරුමුරුංගා මෙම ආහාර වේලේ ගුණාත්මක බව අතිශයින් ඉහළ නංවයි.
පළතුර ලෙස මේ දිනවල බහුල වෙරළු යොදාගත්තෙ ලාභය වගේම එයින් ලැබෙන විටමින් සහා ඛනිජ ලවණත්, ප්රතිඔක්සිකාරක ගුණයත් සළකලා. හැබැයි කුඩාම දරුවෙක් නම් අනතුරු සිදු විය හැකි නිසා බීජ සහිත මෙවැනි පළතුරු තනියම ආහාරයට ගන්න දීම සුදුසු නැහැ.
செய்முறை:
மரவள்ளிக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் நிறைந்த . குறைந்த விலை கொண்ட தோட்டத்திலலேயே இருந்து கூட பெறகூடியதாகும்.இது வயிற்றை நன்றாக நிரப்புவதோடு போதுமான கலோரிகளையும் வழங்குகிறது.மரவள்ளிக்கிழங்கின் ஊட்டச்சத்து தரத்தை அதிகரிக்க இந்த முறையைப் பயன்படுத்தலாம்.
சிறிதளவு தேங்காயுடன் இரண்டு பச்சை மிளகாய்கள், சிறிது மஞ்சள் மற்றும் சிறிதளவு உப்பும் சேர்த்து கலக்கவும். தேங்காய் இந்த உணவில் கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் கலோரிகளை சேர்க்கிறது.தேங்காய்ப்பாலைப் பயன்படுத்தி குழம்பு சமைப்பதைப் போலல்லாமல், தேங்காய் துருவலைப் பயன்படுத்துவது நார்ச்சத்து அதிகரிக்கிறது மற்றும் உணவின் கொழுப்பைக் குறைப்பதோடு உணவிற்காக செலவினையும் குறைக்கிறது.
வேகவைத்த மரவள்ளிக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் எடுத்து தேங்காய் சிரட்டையால் செய்த கரண்டியால் மசிக்கவும்.பிறகு நன்கு கழுவிய அகத்தி இலையைச் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து சிறு தீயில் நன்றாகக் கிளறவும் .அகத்தி இலைகள் வதங்கிய பின் அடுப்பிலிருந்து இறக்கவும். இரும்புச்சத்து, கால்சியம் மட்டுமின்றி புரதச்சத்தும் அகத்தியில் நிறைந்துள்ளது.எனவே, அகத்தியிலை இந்த உணவின் தரத்தை பெரிதும் மேம்படுத்துகிறது.இந்த நாட்களில் ஏராளமாக விரலி பழங்கள் லாபமாககிடைப்பதுடன் அதிலிருந்து வரும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு பண்புகளைக் கருத்தில் கொண்டு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சிறு குழந்தைகளுக்கு வழங்குவதாக இருந்தால் விதையுடன் கூடிய பழங்களை தனியாக சாப்பிட விடுவதை தவிர்த்துக்கொள்ளவும்.