අවශ්ය අමුද්රව්ය:
- පොල් ගෙඩි දෙකක්
- ලොකු දිවුල්ගෙඩි 2ක්
- වතුර පොල් කිරි ගැනීමට අවශ්ය තරම්
- සීනි කෝප්ප භාගයක් පමණ
සාදාගන්නා ආකාරය:
අයිස්ක්රීම් කියන්නෙ සාමාන්යයෙන් සීනි සහා කැලරි අධික ආහාරයක්. වෙළඳපොළෙන් මිලට ගන්නවිට ඒට අමතරව කෘතිම වර්ණකාරක, රසකාරක සහා කල්තබාගැනීමේ ද්රව්ය වුනත් අඩංගු වෙනවා.
අපි මේ අද හැදුවෙ ගෙවත්තෙන් බහුලව පළතුරක් ලැබුණම කඩෙන් ගන්නවට වඩා අඩු වියදමෙන් සහා අසෞඛ්යමත් බව අඩුවෙන් අයිස්ක්රීම් හදාගන්න පුළුවන් බව පෙන්නන්න. මේ රෙසිපිය ඕනෑම පළතුරක් සඳහා භාවිතා කරන්න පුළුවන්.
මුලින්ම පොල් ගෙඩි හීනියට ගා ගෙන මිටි කිරි සහ දිය කිරි වෙන් කර වෙනම භාජන දෙකකට දමා. ශීතකරණයේ පැය දෙකක පමණ කාලයක් තබන්න. පැය දෙකකින් අදාල භාජන දෙකෙහි කිරි සහ වතුර වෙනම ස්ථර දෙකක් ලෙස වෙන් වනු ඇත. කුඩා හැන්ඳක් ආධාරයෙන් කිරි කොටස වෙන් කරගෙන වෙනම භාජනයකට එකතු කරගන්න.
දිවුල් ගෙඩි දෙකට කිරි අඩු කෝප්පභාගයක පමණ ප්රමාණයක් දමා දියකර ඇට ඉවත් කරගන්න. බීටරයක් ආදාරයෙන් ඉතිරි කිරි විනාඩි 10 පමණ බීට් කරගන්න. එයට රස පමණ සීනි එකතුකර (හොඳින් ඉදුණු පළතුරුවලට සීනි දැමීම අවශ්ය නොවෙන්නත් පුළුවන), නවත්වමින් බීට් කරන්න. අනතුරැව ඊට දිවුල් කිරි එක්කර තවත් විනාඩි 5ක් beat කරන්න.
ඉන් පසු එම මිශ්රණය භාජනයට දමා ශිතකරණයේ පැය දෙකක පමණ කාලයක් තබන්න. මේ මිශ්රණය අර්ධවශයෙන් මිඳුනු පසුව නැවත වරක් බීට් කරන්න. ඉන්පසුව නැවත ශීතකරණයේ පැය 6 පමණ කාලයක් තබන්න. ආහාරයට ගැනීමට අවශ්ය වූ විට ශීතකරණයෙන් ඉවතගෙන විනාඩි 5 පමණ තබා ආහාරයට ගන්න.
தேவையான பொருட்கள்:
இரண்டு தேங்காய்
2 பெரிய விளாம்பழங்கள்
தேங்காய் பால் பெற்றுக்கொள்ள போதுமான தண்ணீர்
சுமார் அரை கப் சீனி
செய்முறை:
ஐஸ்கிரீம் பொதுவாக சீனி மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவு.சந்தையில் இருந்து வாங்கும் போது, அதில் செயற்கை நிறங்கள், சுவையூட்டிகள் மற்றும் பழுதுபடாமல் பாதுகாக்கும் இரசாயன பதார்த்தங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதை இன்று, தோட்டத்தில் நிறைய பழங்கள் கிடைக்கும் போது, கடையில் வாங்குவதை விட, குறைந்த செலவில், ஆரோக்கியமான முறையில் ஐஸ்கிரீம் செய்யலாம் என்பதை காட்டவே செய்துள்ளோம்.இந்த செய்முறையை எந்த பழத்திற்கும் பயன்படுத்தலாம்.
முதலில் தேங்காய் துருவலில் இருந்து கெட்டியான பால் மற்றும் இரண்டாம் பால் இரண்டையும் தனித்தனியாக இரண்டு பாத்திரங்களில் சேர்த்து. சுமார் இரண்டு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
இரண்டு மணி நேரத்தில் பின் இரண்டு பாத்திரங்களிலும் உள்ள பால் மற்றும் தண்ணீர் இரண்டு தனித்தனி அடுக்குகளாக பிரிந்திருப்பதை காண்பீர்கள் . ஒரு சிறிய ஸ்பூன் உதவியுடன் பாலை மட்டும் பிரித்து ஒரு தனி பாத்திரத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
இரண்டு விளாம்பழங்களுடன் சுமார் அரை கப் பால் சேர்த்து கரைத்துக்கொண்டு அதில் உள்ள விதைகளை அகற்றிக்கொள்ளவும்.
பீட்டரைப் பயன்படுத்தி, மீதமுள்ள தேங்காய்ப்பாலை சுமார் 10 நிமிடங்கள் அடிக்கவும்.சுவைக்கு சீனி சேர்க்கவும் (நன்கு பழுத்த பழங்களுக்கு சீனி தேவைப்படாது), நிறுத்தி அடிக்கவும்.பின்னர் விளாம்பழத்துடனான பாலை சேர்த்து மேலும் 5 நிமிடங்களுக்கு beat பண்ணவும்.
அதன் பிறகு இக்கலவையை பாத்திரத்தில் சேர்த்து சுமார் இரண்டு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இந்த கலவை ஓரளவு உரைந்து குளிரான தன்மையில், மீண்டும் ஒரு முறை அடித்துக்கொள்ளவும்.
பின்னர் அதை மீண்டும் 6 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
நீங்கள் சாப்பிட விரும்பும் போது, அதை குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து சுமார் 5 நிமிடங்கள் வைத்திருந்து சாப்பிடுங்கள்.