සාදාගන්නා ආකාරය:
සමහර එළවළු පලතුරු අපිට අවුරුද්ද පුරාම එක වගේ ලැබෙන්නෙ නෑ. සමහර කාල වලදී ඕනෑවටත් වඩා ලැබිලා සමහර කාල වලදි හොයාගන්නත් නැති වෙනවා. අධිකව අස්වැන්න ලැබෙන කාලෙදි ඒ අස්වැන්න නාස්ති වෙන්න නොදි අඩු කාල වලදි ප්රයෝජනයට ගන්න පුලුවන් විදියට ආහාර කල් තබා ගන්න එක ඈත අතීතයේ ඉදන්ම කරපු දෙයක්. ඒ සදහා භාවිතා කරන ක්රම ගණනාවක්ම තියෙනවා. වියලීම වගේම තම්බලා වියලීම කියන්නෙත් ඒ වගේ ක්රම. කොස් ඇටත් ඒ විදියට ක්රම කීපයකට කල් තියා ගන්න පුලුවන්. මේ ඒ විදියට කල් තියාගත් කොස් ඇට වලින් හදපු රස කෑමක්.
කොස් ගෙඩියක කොස් ඇට විශාල ප්රමාණයක් තියෙනවනෙ. ඒවා නිකරුණේ අපතේ දාන්නෙ නැතිව කල් තියාගන්න විදියට හදාගත්තම, කොස් හිඟ කාලෙට මේ වගේ රස කෑම හදාගන්න පුළුවන්. මේවා හදාගන්නත් ලොකු අමාරුවක් නෑ. කොස් ඇට වැඩියෙන් තිබුණු කාලෙ ඒව පිරිසිදු කරගෙන, හොදට පැහුණ උණු වතුර එකක දාල විනාඩි 10-15ක් තියලා, හොදට අව්වේ වේලා ගත්ත ඒවා තමයි මේ. දවස් තුන හතරක් තද අව්වේ වේලුණාම අපිට මේව ගොඩක් කල් තියාගන්න පුලුවන්.
ඉතින් අපි උදේ කෑමට මේ කොස් ඇට තම්බන්න හිතන් ඉන්නවනම්, පොතු ඉවත් කරලා (හොදට වේලිලා නිසා ලෙහෙසියෙන්ම පොතු ඉවත්කරන්න පුලුවන්), රෑට වතුර භාජනේක දාලා පෙඟෙන්න තියන්න ඕන. බතල දළු නැත්නම් තෝර කොළ හෝ අපේ විදියට කියනවනම් සිංගප්පූරු කොළ මේ කොස් ඇට තම්බද්දි ඒකට දාලම තම්බගන්න පුලුවන් අපිට. ඒවත් අපිට අපේ ගෙවත්තෙන්ම හොයාගන්න පුලුවන්.
මේක හරි රස කෑමක්. ඒ වගේම සුවදයි. තව ටිකක් රහ වෙනවා පොල් ටිකක් එකතු කරගත්තම.
செய்முறை:
சில காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாக கிடைப்பதில்லை. சில காலங்களில் அதிகமாக இருக்கும் சில காலங்களில் தேடி பெற்றுக்கொள்ள முடியாமலும் இருக்கும். அறுவடைக் காலத்தில் விளைந்த விளைச்சல் வீணாகாமல் இருக்க, குறைந்த பருவத்தில் பயன்பெறும் வகையில் உணவைப் பாதுகாத்து வைப்பது பழங்காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது.அதற்கு பல முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. காயவைத்தல் (வத்தலிடல் ) மற்றும் கொதிக்கவைத்தலின் பின் காயவைத்தல் போன்ற முறைகள். பலாவிதைகளை இது போன்ற பல வழிகளில் பாதுகாக்கலாம்.இவ்வாறு பாதுகாக்கப்பட்ட பலாவிதைகளில் இருந்து இந்த சுவையான உணவு தயாரிக்கப்பட்டுள்ளது.
பலாகாய் ஒன்றை எடுத்தால் அதில் பல பலா விதைகள் உள்ளன. அவற்றை வீணாக்காமல் நீண்ட காலம் வைத்திருக்கும் வகையில் பதப்படுத்தி வைத்துக்கொண்டால், பலா விதைகள் தட்டுப்பாடு ஏற்படும் காலத்திலும் கூட இதுபோன்ற சுவையான உணவுகளை தயார் செய்யலாம்.
இவற்றை செய்வதற்கு பெரிய சிரமமில்லை. பலா விதைகள் அதிகமாக இருந்த காலங்களில், அவற்றை சுத்தம் செய்து, நன்கு கொதிக்கவைத்த வெந்நீரில் 10-15 நிமிடம் வைத்து, வெயிலில் நன்கு உலர்த்தவும். மூன்று நான்கு நாட்கள் கடும் வெயிலில் உலர்த்திய பின் இதை நீண்ட காலத்துக்கு வைத்திருக்கலாம். எனவே, இந்த பலாவிதைகளை காலை உணவாக வேகவைக்க நினைத்தால், தோலை நீக்கிய பின் (நன்கு காய்ந்திருப்பதால் தோல்கள் எளிதில் அகற்றப்படும்), அவற்றை ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இந்த பலா விதைகளை வேக வைக்கும் போது வற்றாளை கிழங்கின் இளம் இலை அல்லது தோரை இலை அல்லது சிங்கப்பூர் இலைகளை சேர்த்து வேகவைக்கலாம். நம் சொந்த தோட்டத்திலும் இவ்வகை கீரைகளை பெற்றுக்கொள்ளலாம்.
இது மிகவும் சுவையான உணவு. மற்றும் வாசனை மிகுந்த உணவு வகை . தேங்காய் சேர்த்தால் இன்னும் கொஞ்சம் சுவையாக இருக்கும்.