අළුකෙසෙල් ලෙලි කූණිස්සන් මැල්ලුම / சாம்பல் வாழைத்தோலுடன் கூனி இறால் சம்பல்

සාදාගන්නා ආකාරය:

අපි ආහාර පිසීමේදී ඉවත දාන බොහෝ දේවල් ආහාරයට ගන්න පුළුවන්.

මේ ඊයෙ පිසූ අළුකෙසෙල් වලින් ඉතුරු කරගත් ලෙලි. සාමාන්‍ය පොල් මැල්ලුම් සාදන ආකාරයටම ඇතිලියට තෙල් දමා රත්වූ පසු හොඳින් සේදූ කූණිස්සන් එක් කරගන්න. කූණිස්සන් බැදුනු විට හීනියට ලියාගත් අළුකෙසෙල් ලෙලි සහා කරපිංචා එකතු කරගන්න. පොල්වලට කහා, කොචිචි (වත්තෙන් බහුලව ලැබෙන නිසා අමු මිරිස් වෙනුවට කොච්චි දැම්මා), හීනියට ලියාගත් සුදු ළුණු, බිලිං සහා ළූණුද එක්කර හොඳින් අනාගෙන බැදුණු කූණිස්සන් සහා අලුකෙසෙල් පොතු මතට එක් කරගන්න.

හැඳි මිට ආධාරයෙන් හොඳින් මිශ්‍ර කරගෙන පොල් මැළවීගෙන එන විට ලිපෙන් බාගන්න.
මා මෙය පිළියෙල කරගත්තෙ උදේට බත් සමඟ ආහාරයට ගන්න. මේකයි බතුයි විතරක් උනත් රහයි. හොදි ඕනෙ නම් කිරි හොද්දක් හදාගත්තත් ඇතිනෙ. නිකම්ම පොල් සම්බෝල කනවාට වඩා ප්‍රෝටීන් සහා එළවළුවක්ද අන්‍තර්ගතයි. ඉදි ආප්ප සමඟ වුනත් කෑමට ගන්න පුළුවන්. මේ වගේම තවත් ලෙලි සහා පොතු තියෙනවා අපිට ආහාරයට ගන්න පුළුවන්.

செய்முறை:

 சமைக்கும் போது தூக்கி எறியும் பல பொருட்களை நாம் உணவாக மாற்றியமைக்கலாம்.

இவை நேற்றைய தினம் சமைத்த வாழைக்காயில் எஞ்சிய தோல்கள் .வழக்கமான தேங்காய் சம்பல் செய்வது போல், பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, சூடானதும், நன்கு கழுவிய கூனி இறாலை சேர்க்கவும்.கூனி இறால் வதங்கியதும் மெலிதாக கீறிவைத்த வாழைக்காய் தோலையும்.

கறிவேப்பிலையையும் சேர்க்கவும்.தேங்காய், கொச்சி (தோட்டத்தில் அதிகம் இருப்பதால் பச்சை மிளகாய்க்கு பதிலாக கொச்சி பயன்படுத்தப்படுகிறது), பொடியாக நறுக்கிய பூண்டு, பிலிங்காய், வெங்காயம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும், அவற்றை வறுத்த கூனியிறால் மற்றும் வாழைக்காய் தோலுடன் சேர்க்கவும். அகப்பை கைப்பிடியின் உதவியுடன் நன்கு கலக்கவும்.தேங்காய் வதங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கிக்கொள்ளவும்.

காலையில் சோற்றுடன் சாப்பிட இதை நான் தயார் செய்தேன். இதனுடன் சோறு மட்டும் இருந்தாலும் ருசியாக இருக்கும். குழம்பு வேண்டுமானால் பால் குழம்பு ஒன்று செய்யலாம்.தேங்காய் சம்பலோடு சாப்பிடுவதை விட, இதில் புரதம் மற்றும் காய்கறிகளும் சேர்ந்துள்ளன. இடியப்பத்துடனும் கூட இதை உண்ணலாம். இது போல நாம் ஒதுக்கும் நிறைய தோல் வகை, பட்டைவகைகள் உணவாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளன.

Scroll to Top