අවශ්ය අමුද්රව්ය:
- හොඳින් ඉදුණු සීනි කෙසෙල් ගෙඩි 2යි
- පොල්තෙල් 25ml (තේ හැඳි 5ක් පමණ)
- කුරක්කන් පිටි 75g
- Baking powder පුරවපු තේ හැඳි 1යි
- කුරුඳු කුඩු කපාපු තේ හැඳි 1යි
සාදාගන්නා ආකාරය:
මේ අමුද්රව්ය භාවිතයෙන් අවසාන රූපයේ දැක්වෙන පරිදි ටෝස්ට් යුගළ දෙකක් සදාගත හැක. සාදා ගැනීමට ගත වන මුලු කාලය විනාඩි 15 ක් පමණ වේ.
ගෑරුප්පුවක් ආධාරයෙන් කෙසෙල් හොඳින් පොඩි කරගන්න.
එයට පොල් තෙල් එක්කර හෑන්ඩ් බීටරයක් ආධාරයෙන් ක්රීම් එකක් වන තුරු සැහැල්ලු ලෙස බීට් කරගන්න. කුරක්කන් පිටි, බේකින් පවුඩර් සහා කුරුඳු කුඩු කොටස් වශයෙන් එක් කරමින් හොඳින් මිශ්ර කරගන්න.
සැන්ඩ්විච් ටෝස්ටරය රත්වූ පසු පොල් තෙල් මදක්, පොට්ටනියක් හෝ පින්සලක් ආධාරයෙන් ඒ මත තවරගන්න. ඉන්පසු මිශ්රණය සමාන කොටස් හතරක් ලෙස ටෝස්ටරයේ කොටස් හතරට දමා ටෝස්ට් කරගන්න. මිනිත්තු තුනකින් පමණ කුරුඳු සුවඳ විහිදී යනු ඇති අතර බොහෝවිට එය පිස අවසන් බවට ඉඟියකි.
එහෙත් බෑමට කළින් toothpick එකක් ආධාරයෙන් මැද කොටස පිරික්සා බලා වියළි ස්වභාවයක් ඇති බව තහවුරු කරගත හැක. මෙය පිසූ ගමන් උණුවෙන්ම ආහාරයට ගැනීම වඩාත් හොඳය.
தேவையான பொருட்கள்:
2 நன்கு பழுத்த சீனி வாழைப்பழங்கள்
25 மிலி தேங்காய் எண்ணெய் (சுமார் 5 தேக்கரண்டி)
குரக்கன் மா 75 கிராம்
1 தேக்கரண்டி நிறைந்த பேக்கிங் பவுடர்
1 தேக்கரண்டி மட்டம் தட்டிய கருவாப்பட்டை தூள்
செய்முறை:
இந்த பொருட்களைப் பயன்படுத்தி, கடைசி படத்தில் காட்டப்பட்டுள்ளபடி இரண்டு ஜோடி டோஸ்ட்களை செய்யலாம். தயாரிப்பதற்கான மொத்த நேரம் சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே.
வாழைப்பழத்தை ஒரு முட்கரண்டி கொண்டு நன்றாக மசிக்கவும். அதனுடன் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து, க்ரீம் ஆகும் வரை ஹேண்ட் பீட்டரின் உதவியுடன் லேசாக அடிக்கவும்.
குரக்கன் மாவு, பேக்கிங் பவுடர் மற்றும் கருவாப்பட்டை தூள் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கலக்கவும்.
சாண்ட்விச் டோஸ்டர் சூடாகியதும், சிறிது தேங்காய் எண்ணெயை ஒரு துணி மூலம் அல்லது பிரஷ் மூலம் அதன் மீது தடவவும். பிறகு டோஸ்டரின் நான்கு பாகங்களிலும் கலவையை நான்கு சம பாகங்களாகப் போட்டு டோஸ்ட் செய்யவும்.
சுமார் மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, கறுவாப்பட்டையின் வாசனை வெளியேறும் மற்றும் அது சமையல் முடிந்துவிட்டது என்பதற்கான அறிகுறியாகும். ஆனால் இறக்குவதற்கு முன், டூத் பிக் உதவியுடன் நடுப்பகுதியை குத்தி பார்த்து, அது உலர்ந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இதை சமைத்தவுடன் சூடாக சாப்பிடுவது நல்லது.