අවශ්ය අමුද්රව්ය:
- බඩ ඉරිඟු පිටි කෝප්ප 1 1/2
- හාල් පිටි කෝප්ප 1/2
- ගා ගත් පොල් කෝප්ප 3/4
- වතුර කෝප්ප 3/4
- රස අනුව ලුණු
සාදාගන්නා ආකාරය:
தேவையான பொருட்கள்:
- 1 1/2 கப் சோள மா
- 1/2 கப் அரிசி மா
- 3/4 கப் துருவிய தேங்காய்
- 3/4 கப் தண்ணீர்
- தேவைக்கேற்ப உப்பு
செய்முறை:
சோள மாவை சந்தையில் வாங்கலாம், ஆனால் அது சற்று விலை அதிகம். 500 கிராம் பாக்கெட்டின் விலை சுமார் ரூ.200/=. இல்லையெனில்,காயவைத்த சோள விதைகளை அரைத்து சோள மாவு வீட்டிலேயே செய்யலாம்.உங்களிடம் அதிகளவில் சோள விதைகள் இருக்குமாயின் மில்லில் கொடுத்தேனும் அரைத்தெடுக்கலாம்.
ஒரு பாத்திரத்தில் சோள மாவு, அரிசி மாவு (அல்லது சோள மாவு மட்டும் உபயோகிக்கலாம்), உப்பு மற்றும் தேங்காய் துருவல் போட்டு நன்கு கலக்கவும்.
மாவை நன்கு கலக்க உங்கள் விரல் நுனியைப் பயன்படுத்தவும். அதற்கு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து இந்தக் கலவையை எப்போதும் செய்யும் பிட்டு வடிவில் உருட்டி எடுத்து கொள்ளுங்கள். . இங்கு, நாம் எடுக்கும் தேங்காய்களில் இருக்கும் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் தேவைப்படும் அளவு மாறுபடும். நாம் சாப்பிடும் வழக்கமான பிட்டு போல் இக்கலவையை வேகவைக்கவும்.
இந்த பிட்டு கலவையில் ஒரு கைப்பிடி முருங்கை இலையைச் சேர்த்தால் சுவையாக இருக்கும் அத்தோடு அதன் ஊட்டச்சத்தின் தரம் அதிகரிக்கும். இல்லையெனில், ஏதேனும் காய்கறிகளைச் சேர்த்து ஊட்டச்சத்து பிட்டு செய்யலாம்.