මේ සලාදය හදන්න ඕන කරන්නෙ පැල මුං, පොල් , තක්කාලි , අමු මිරිස්,ගම්මිරිස්,ලුනු, ලූනු, සුදුළූණු , දෙහි , සහ කහ කුඩු සවල්පයක් විතරයී.
මුං ඇට ටික හොදින් සෝදලා පැය 24 පෙගෙන්න තියලා, දවස් දෙක තුනක් පිරිසිදු තෙත රෙදි කෑල්ලක ඔතලා තිබ්බම මුං ඇට පැල වෙනවා.
ඒවට තමයි අපි පැල මුං කියන්නෙ. සාමාන්ය මුං ඇට වලට වඩා පැල මුං වල තියන ප්රෝටීන ප්රමානය ඉතාමත් ඉහලයි.
පැල මුං ටික රෙදි කෑල්ලෙන් ගලෝල හොදින් සෝදල තෙත පෙරල අරන් , පොල් ටිකට කපාගත් අමු මිරිස් ,ලූනු,සුදුළූණු, ගම්මිරිස්, කහ හොදින් අතගාලා ඒ සම්බොලය පැල මුං තියන බාජනයට දාලා තක්කාලි, දෙහි දාලා මිශ්ර කරනවා.. අන්තිමට රස අනුව ලුනු දානවා.
මේ සලාදයට පොඩ්ඩො කැමති ඕනම අමුවෙන් කන්න පුලුවන් එලවලුවක් එකතු කරන්න පුලුවන්. කැරට්, බීට්, බඩ ඉරිගු වගෙ.
ඒ වගෙම තම්බපු ගම් බිත්තරයක් එක් කරගන්නත් පුලුවන්. අන්නාසි වගෙ පලතුරක් උනත් සලාදයට කදිමයී.
இந்த சாலட் செய்வதற்கு, முளைப்பயறு , தேங்காய், தக்காளி, பச்சை மிளகாய், மிளகு, உப்பு, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் இந்த சாலட் செய்ய தேவையானவையாகும் .
பயறை நன்றாகக் கழுவி, 24 மணி நேரம் ஊற வைக்கவும் , அதன்பின் சுத்தமான ஈரத்துணியில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் சுற்றி வைத்தால், பயறானது முளைக்க ஆரம்பிக்கும்.
இதனை தான் முளைப்பயறு என்கிறோம்.. சாதாரண பயறுடன் ஒப்பிடும்போது முளைப்பயறில் புரதத்தின் அளவு மிக அதிகம்.
முளைப்பயறை துணியில் இருந்து அகற்றி நன்றாகக் கழுவி, ஈரத்தைப் பிழிந்தெடுக்கவும், பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, மிளகுத்தூள், மஞ்சள் ஆகியவற்றை தேங்காய் துருவலில் நன்றாகக் கலந்து , முளைப்பயறு உள்ள கிண்ணத்தில் சேர்த்து, கடைசியாக தக்காளி, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கவும் , சுவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும்.
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த சாலட்டில் நீங்கள் விரும்பும் எந்த காய்கறியையும் சேர்க்கலாம்.(கேரட் ,பீட் ,சோளம் போன்றவை ) அது போல வேகவைத்த நாட்டு முட்டையையும் சேர்க்கலாம். அன்னாசி போன்ற பழங்கள் கூட சாலட்டுக்கு இன்னும் சுவையை சேர்க்கும்.