තම්බපු සලාද / வேகவைத்த சாலட்

සාදාගන්නා ආකාරය:

සලාද කන්න සමහර අය අකමැතියි කෘෂි රසායන යොදපු එළවළු අමුවෙන් කෑම සෞඛ්‍යයට හානිදායක නිසා. ඉතින් තමන්ගෙ ගෙවත්තෙන් හෝ වෙනත් කාබනික වගාවකින් එළවළු ගන්න බැරි කෙනෙක්ට හදාගන්න පහසු සලාදයක් තමයි මේ. (හැබැයි සාමාන්‍ය විදිහට එළවළු පිසුවහම කෘෂි රසායන සම්පූර්ණයෙන්ම ඉවත් වෙනවා කියලා පැහැදිළි විද්‍යාත්මකව ඔප්පු කිරීමක් නම් මන් දැකලා නෑ තාමත්. ඒකත් කියන එක මගේ යුතුකමක් මන් හිතන්නෙ).

මන් මේකට එළවළු විදිහට ගත්තෙ කැරට්, ගෝවා සහා බණ්ඩක්කා. බත් එක උයද්දි රයිස් කුකර් එකේ හුමාලයෙන් මද වෙලාවක් තම්බලා ගත්තෙ. මේකටම මන් ප්‍රෝටීන් ප්‍රභවයක් විදිහට තම්බපු කුකුල් මසුත් යොදාගත්තා. සමහර අලෙවි සැල්වල තියෙනවා “චිකන් බයිට්” කියලා එයාලා මස් කපද්දි ඉවත්වෙන චූටි කැබලි වෙනම විකුණන්න. ඒවා සාමාන්‍ය කුකුල් මස්වලට වඩා ලාභයි සහා කටු නැති නිසා වාසිය වැඩියි. මේ වගේ කුඩා කැබලි ලෙස දාන සලාද, සුප් වර්ග, බත් වර්ග එහෙම හදන්න ඒවා යොදාගන්න එක පෝෂණමය සහා ආර්ථිකමය ලෙස වාසියි. තියෙන්නෙ කුඩා කැබලි විදිහට නිසා තම්බගන්න යන්නෙත් විනාඩි 10කටත් අඩු කාලයක්.

මේකෙ dressing එක විදිහට මන් පාවිච්චි කළේ කුකුල් මස් ස්ටොක් එකෙන් පොඩි අලිගැටපේර කෑල්ලක් ක්‍රීම් කරගෙන. ඒකට අලුතෙන් එකතු කළේ කෑලි මිරිස් ස්වල්පයක් විතරයි. (ස්ටොක් = මස්තම්බපු වතුර – ඉඟුරු, සුදු ළූණු, කුරුඳු පොතු කැබැල්ලක්, කහ, ලුණු සහා ගම්මිරිස් ස්වල්පයක් දාලා මද වෙලාවක් අතගාලා තියලා, වතුර ස්වල්පයක් දාලා තැම්බුවෙ)

මෙහෙම dressing එකක් නැතුවත් මේක රහයි ඉතින්…නැත්නම් ස්ටොක් එක විතරක් උනත් dressing එක විදිහට පාවිච්චි කරන්න පුළුවන්. මන් අද රතු බත් එක්ක කන්න හදපු නිසා තමයි ටිකක් ක්‍රීමි ගතියක් එන්න හැදුවෙ. ආහාර වේලෙ පෝෂණ ගුණය වැඩිකරගන්න ගොටුකොළ ටිකකුත් වෙනම එකතු කරගත්තා… අරකට දාන්නෙ නැතුව වෙනම තිබ්බෙ රස වෙනස්ව විඳින්න ඕනෙ නිසා. මේක cold හෝ warm salad එකක් විදිහට භාවිතා කරන්න පුළුවන්. මට නම් වැඩියෙන්ම රස cold sald එකක් විදිහට හදලා උණු බත් එක්ක කද්දි.

செய்முறை:

சிலருக்கு சாலட் சாப்பிட பிடிக்காது, ஏனெனில்  இரசாயனங்கள் கொண்ட பயிர்செய்கையால் காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு பாதிப்பானது என்பதால் ஆகும்.எனவே, தங்கள் தோட்டத்திலோ அல்லது பிற இயற்கை  பயிர்களிலோ காய்கறிகளை வாங்க முடியாத ஒருவருக்கு இது எளிதான சாலட்டாக இருக்கும்.(இருப்பினும், காய்கறிகளை சமைப்பதனால் இரசாயனங்களை முற்றிலுமாக நீக்கிவிடலாம்  என்பதற்கான தெளிவான அறிவியல் ஆதாரங்கள் இன்னுமில்லை ,அதனையும் குறிப்பிடுவது  என் கடமை என்று நினைக்கிறேன்).

இதற்கு கேரட், கோவா, வெண்டிக்காய் போன்றவற்றை காய்கறிகளாக பயன்படுத்தினேன். சோறு  சமைக்கும் போது ரைஸ் குக்கரில் சிறிது நேரம் வேகவைத்துக்கொண்டேன். நான்  இதற்கு  புரத சத்தை பெற  வேகவைத்த கோழியை பயன்படுத்தினேன். சில கடைகளில் இறைச்சியை வெட்டும்போது ஒதுக்கப்படும்  துண்டுகளும் விற்பனைக்கு உண்டு.அவை வழக்கமான கோழியை விட மலிவானது  மற்றும் நன்மை என்னவென்றால், அவைகளில் எலும்புகள் இருக்காது சதைகள் நிறைந்ததாக இருக்கும் .அவற்றைப் பயன்படுத்தி சாலடுகள், சூப்கள், சோறு வகைகள்  போன்றவைகள் செய்ய  சிறந்தது. ஊட்டச்சத்து மற்றும் பொருளாதார ரீதியாகவும்  நன்மை பயக்கும்.இது சிறிய துண்டுகளாக இருப்பதால், சமைக்க 10 நிமிடங்களுக்கும் குறைவாகவே எடுத்துக்கொள்ளும்.

 இந்த டிரஸ்ஸிங்கிற்கு, நான் சிக்கன் ஸ்டாக்கில்  ஒரு சிறிய யானைக்கொய்யா  பழத்தை கிரீம் செய்துகொண்டு, அதில் சிறிதளவு  மிளகாய்த் துகள்கள்  மட்டுமே சேர்த்துக்கொண்டேன். (ஸ்டாக் = இறைச்சியை கொதிக்க வைத்த தண்ணீர் – இஞ்சி, பூண்டு, பட்டை துண்டு, மஞ்சள்தூள், உப்பு, மிளகுத்தூள், சேர்த்து சிறிது நேரம் கிளறிய பின், சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்).

இது போன்ற dressing இல்லாவிட்டாலும் ருசியாக இருக்கும். அல்லது சோற்றையே  டிரஸ்ஸிங்காகப் பயன்படுத்தலாம்.நான் இன்று சிவப்பரிசி  சோறுடன்  சாப்பிட முயற்சித்தேன், அதனால் தான்  க்ரீம் வடிவில் செய்தேன். உணவின் ஊட்டச் சத்தை அதிகரிக்க, வல்லாரை  இலைகளையும் சேர்த்தேன். சுவையை வித்தியாசமாக அனுபவிக்க வேண்டும் என்பதால், அவற்றுடன்  சேர்க்காமல் தனித்தனியாக வைத்துக்கொண்டேன் .இதனை  குளிரான  அல்லது சூடான சாலட்டாகப் பயன்படுத்தலாம். எனக்கென்றால், குளிரான சாலட் செய்து, சூடான சாதத்துடன் சாப்பிடுவது தான்   மிகவும் சுவையாக இருக்கும்.

Scroll to Top