Lunch box – No 12

සාදාගන්නා ආකාරය:

අද බබාට උදේ පන්තිය විතරයි. ඒකෙදි කන්න කතුරුමුරුංගා රොටියක් හදලා දුන්නා. පාන් පිටිත් ටිකක් ගණන් අඩු වුන නිසා කට්ටිය ආයෙ රොටි කන්න පටන්ගන්නවා නම් මෙහෙම මොනාම හරි ගෙවත්තේ තියෙන දෙයක් එකතු කරගෙන ඒකෙ පෝෂණ ගුණය වැඩි කරගන්න පුළුවන්. මේකට කතුරුමුරුංගා වලට අමතරව මන් හීනියට ලියපු අමු මිරිස් කරල් දෙකකුයි ලීක්ස් කොළේකුයිත් දැම්මා. ඒ දෙකමත් ගෙවත්තෙන්. තව රට ළූණු කෑල්ලකුත් හීනියට ලියලා දැම්මා රස වැඩි වෙන්න.

රොටි කිව්වම ඉතින් ඕනෑම පිටි වර්ගයකින් හදන්න පුළුවන්. හාල් පිටි, කුරක්කන් පිටි, කොස් ඇට පිටි, මඤ්ඤොක්කා පිටි… ඒ ඒ පිටි වර්ගයට වතුර දාන්න ඕනෙ පදම තමයි පොඩ්ඩක් අත් හදා බලලා ඉගෙනගන්න ඕනෙ. විවිධ රස ගේනවා වගේම දේශීය පිටිවර්ගවලින් කෑම හැදුවම රටට ඩොලරුත් ඉතුරු වෙනවා. තන්තු ප්‍රමාණය සහා සීනි අවශෝෂණ අගයත්, පෝෂණ ගුණයත් මේ එක් එක් පිටිවර්ගවල වෙනස්. දේශීය පිටි වර්ග ආනයනික තිරිඟු පිටිවලට වඩා ඉස්සරහින් ඔය හුඟක් ගුණාංගවලින්.

රොටිය කන්න දුන්නෙ කෙසෙල්. අපේ රටේ තියෙන විවිධ කෙසෙල් වර්ග ඇත්තටම අපිට සම්පතක්. ඒ ඒ වර්ගවල රස, පැහැය වගේම පෝෂණ ගුණයත් එකිනෙකට වෙනස්. කෙසෙල් කියන්නෙ කැලරි වැඩි පළතුරක්. ඉතින් මේ කෑම වේලෙත් කැලරි ප්‍රමාණය වැඩියි. මීට අමතරව කෙසෙල් ලෙලි වලින් ගෙවත්තට පොහොර හදාගන්න පුළුවන් වීමේ වාසියත් තියෙනවා. 

செய்முறை:

இன்று குழந்தைக்கு காலை வகுப்பு மட்டுமே உள்ளது. அங்கே சாப்பிட  அகத்தி  ரொட்டி செய்து கொடுத்தேன் .கோதுமை  மாவின் விலை  சற்று  குறைந்ததால் மக்கள் மீண்டும் ரொட்டி சாப்பிட ஆரம்பிக்க நினைத்திருந்தால், நீங்கள் தோட்டத்தில் இருந்து ஏதாவது ஒன்றை  இதுபோல  சேர்த்து அதன் ஊட்டச்சத்து தரத்தை அதிகரிக்கலாம். இங்கு அகத்தி இலை தவிர, இரண்டு பச்சை மிளகாய் மற்றும் ஒரு லீக்ஸ் இலையும்  சேர்த்தேன்.இவை இரண்டும் தோட்டத்தில் இருந்து பெற்றுக்கொண்டவை. ருசியாக இருக்க ஒரு துண்டு நாட்டு வெங்காயத்தையும் சிறுதுண்டுகளாக வெட்டி சேர்த்தேன்.

ரொட்டி என்று சொல்லும் போது எந்த வகை மாவில் வேண்டுமானாலும் செய்யலாம்.அரிசி மா, குரக்கன் மா, பலா மா, மரவள்ளிக்கிழங்கு மா… இப்படி ஒவ்வொரு வகை மாவிலும் தண்ணீர் சேர்க்கும் முறையைக் கொஞ்சம் பயிற்சி செய்து கற்றுக் கொண்டால் போதுமானது.விதவிதமான சுவைகளை தரும் உணவுகளை செய்வதோடு , உள்ளூர் பொருட்களில் இருந்து உணவு தயாரிக்கப்படுவதால் , நாட்டுக்கு டாலர்களை மிச்சப்படுத்திக்கொள்ளலாம்.இந்த வகைகளில் ஒவ்வொரு மா வகைகளிலும் நார்ச்சத்து மற்றும் சீனியை உறிஞ்சுதல் தன்மை மற்றும் ஊட்டச்சத்து தரம் ஆகியவை வேறுபட்டவை ஆகும் .இந்த குணங்கள் பலவற்றுடன் ஒப்பிடும் போது  இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவை விட உள்ளூர் மாவுகளே மிகவும்  சிறந்தது.

ரொட்டி சாப்பிட வாழைப்பழம் கொடுக்கப்பட்டது. நம் நாட்டில் உள்ள பலவிதமான வாழைப்பழங்கள் உண்மையில் நமக்கு ஒரு வளம்.ஒவ்வொரு வகையிலும்  சுவை, நிறம் மற்றும் ஊட்டச்சத்து தரம் வேறுபட்டது.வாழைப்பழம் அதிக கலோரி கொண்ட பழம். எனவே இந்த உணவில் கலோரிகளும் அதிகம். கூடுதலாக, வாழைத்தோலில் இருந்து தோட்டத்திற்கு உரம் தயாரிக்க முடியும் என்ற நன்மையும் உள்ளது.

Scroll to Top