සාදාගන්නා ආකාරය:
මේක හරිම simple recipe එකක්. විනාඩි 15ක් විතර ගියා මේ වැඩේට.
කාමරංකා නිතරම කන්න පුළුවන් පලතුරක් නෙමේ. හැබැයි ගහේම ඉදිලා අහක යනවට වඩා ඒකෙන් ජෑම් එකක් හදලා කල් තියාගන්න එක මේ කාලෙ හැටියටත් ගොඩක් වටිනවා.
ඉදුණු කාමරංගා ගෙඩි ටිකක් හෝදලා අරගෙන දාර ටික ඉවත් කරගන්න ඕන මුලින්ම..ඊටපස්සෙ ගොඩක් පොඩි කෑලි වලට කපාගන්න ඕන. වතුර කෝප්ප 1 1/2 භාජනයකට දාලා කපාගත්ත කාමරංගා ටික එකට දාලා හොදට තැම්බෙන්න දාන්න. (Blend කරගන්න පුලුවන් නම් ඒ ටික තවත් ලේසියි)හොදට තැම්බුනාට පස්සෙ හැන්දෙන් පොඩි කරගන්න පුලුවන් ලේසියෙන්ම.
ඊට පස්සෙ අවශ්ය ප්රමාණයට සීනි දාලා ලුණු ටිකකුත් එකතු කරලා මධ්යස්ථ උෂ්ණත්වයේ හැදි ගාන්න ඕන. මිශ්රණය ඝන වුණාම ලිපෙන් ඉවත් කරගන්න. දෙහි බිංදු කීපයක්, කුරුඳු පොත්තක් එක්ක කරදමුංගු ටිකක් මිශ්ර කරලා නිවෙන්න තියන්න.
செய்முறை:
இது மிகவும் எளிமையான செய்முறையாகும். இந்த வேலைக்கு சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே செலவானது. நட்சத்திரபழம் என்பது தொடர்ந்து சாப்பிடக்கூடிய பழம் அல்ல.ஆனாலும் மரத்திலே பழுத்து வீணாவதை விட அதிலிருந்து ஒரு ஜாம் செய்து அதை நீண்ட காலம் வைத்திருப்பது மிகவும் பயனுள்ளதாகும்.
முதலில் நீங்கள் பழுத்த சில நட்சத்திர பழங்களை கழுவி அதன் விளிம்புகளை அகற்ற வேண்டும். பின்னர் அவற்றை மிகச் சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி நறுக்கிய நட்சத்திரப்பழங்களை ஒன்றாக சேர்த்து நன்கு கொதிக்க விடவும். (Blend செய்துகொண்டால் இன்னும் சுலபம்) நன்கு அவிந்ததும் கரண்டியால் எளிதாக நசுக்கலாம்.
அதன் பிறகு, தேவையான அளவு சீனி சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து மிதமான வெப்பநிலையில் சமைக்க வேண்டும்.கலவை கெட்டியானதும், அடுப்பிலிருந்து அகற்றவும்.அதில் எலுமிச்சை சாறு சில துளிகளுடன் ஒரு கருவப்பட்டை, சிறிதளவு ஏலக்காய் கலந்து ஆறவிடவும்.