பாரம்பரிய பிட்டுகளில் இருந்து சற்று வித்தியாசமாக காய்கறிகள் மற்றும் மூலிகைகளால் இன்று பிட்டு தயாரிகும் முறையை அறிவோம்.
எனவே பூசணி ஒரு மலிவான மஞ்சள் காய்கறி மாற்றாகும், கேரட்டுடன் ஒப்பிடும்போது எளிதாகக் கிடைக்கிறது.
முருங்கை இலைகள் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்து.வீட்டு தோட்டத்திலும், வேலியின் ஓரத்திலும் முருங்கை செடியை நடலாம். பொதுவாக அரிசி மா மற்றும் தேங்காய் பூ கலந்து செய்யப்படும் பிட்டு நல்ல சக்தி ( energy)தரும் உணவாக இருந்தாலும், காய்கறிகள்/கீரைகளை பயன்படுத்தி குறைந்த செலவில், எளிதாகவும், விரைவாகவும் கூடுதலான சத்துக்கள் கொண்ட உணவு செய்யலாம்.
இந்த சத்தான பூசணிக்காய் பிட்டு எடை குறைந்த குழந்தைகள் உடல் எடையை அதிகரிக்க ஏற்றது காலை அல்லது இரவு உணவாக வழங்களாம். பூசணிக்காயின் இனிப்பு தன்மையால், சிறு குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும்.
இந்த பிட்டை செய்வது மிகவும் எளிது. கழுவிய பூசணிக்காயை சிறிய துண்டுகளாக துருவவும். (அல்லது மெல்லியதாக நறுக்கவும்.) பெரிய பாத்திரத்தில் தேங்காய் துருவல், துருவிய பூசணிக்காய் மற்றும் உப்பு சேர்த்து பிட்டு கலவை தயாரிக்கவும். இப்போது அதனுடன் தேவையான அளவு அரிசி மா சேர்த்து, வழக்கம் போல பிட்டு செய்யும் பதத்தில் கிளறவும் . கடைசியாக அதில் ஒரு கைப்பிடி முருங்கை இலையைச் சேர்த்துக் கிளறவும். இப்போது கலவையை பிட்டு குழல் (அல்லது ஸ்டீமரில்) போட்டு வேக வைக்கவும். நாம் பூசணிக்காயைத் துருவி நன்றாகப் பயன்படுத்துவதால், அரிசி மாவு கொதிக்கும் அதே நேரத்தில் பூசணிக்காயும் நன்றாக வேகும். நல்ல வாசனையுடன் நல்ல சுவையும் கொண்டது.