කොස් ඇට අග්ගලා / பலா விதை உருண்டை

සාදාගන්නා ආකාරය:

බත් ගස කියලා කොස් ගසට කීවෙම කොස් ගහෙන් බඩ පුරවගන්න කෑම වර්ග බොහොමයක් හදාගන්න පුළුවන් නිසානේ. කොස් ඇට වලින් හදාගන්න පුළුවන් කොස් ඇට අග්ගලා ඒකෙන් එක රසවත් ආහාරයක්.

සාමාන්‍යයෙන් කොස් ගෙඩියක කොස් ඇට 100ක් 200ක් තියෙන නිසා කල්තියාගෙන වුණත් මේ ආහාරය හදාගන්න පුළුවන්.
හදන්නේ මෙහෙමයි. හරිම සරළයි.

කොස් ඇට ටිකක් අරන් රන්වන් පාට වෙනකන් කබලේ බැදගන්න. ඊටපස්සේ ‍රස්නේ ටිකක් නිමුණාම අපිට පොතු ටික ලේසියෙන් සුද්ද කරගන්න පුළුවන්. ඊලගට තියෙන්නේ වංගෙඩියෙන් හරි ග්‍රයින්ඩර් එකෙන් හරි පොඩි කෑලි වලට කඩා ගන්න එක. ඊටපස්සේ ගා ගත්ත පොල් එක්ක අවශ්‍ය පමණට සීනී දාලා මිශ්‍ර කරගන්නයි තියෙන්නේ.

අවශ්‍ය නම් ගම්මිරිස්, ලුණු ස්වල්පයකුත් එකතු කරගන්න පුළුවන්. අග්ගලා හදන විදිහට බෝල හදාගත්තහම පිළිගන්වන්න ලේසියි.
මේ පින්තූරේ තියෙන්නේ කොස් ඇට බහුල කාලෙක ගෙදර හදාගත්ත අග්ගලා ටිකක්. අටුකොස් ඇට වලිනුත් මේ විදිහටම හදාගන්න පුළුවන්. ඒ වගේම කබලේ බැදගන්න අමාරු නම් කොස් ඇට ලිපේ දාලා පුච්චලා හරි තම්බලා වුණත් හදාගන්න පුළුවන්.

ශ්‍රී ලංකා වෛද්‍ය පරීක්ෂණ ආයතනයේ 2021 දත්ත වලට අනුව කොස් ඇට 100g ක ප්‍රෝටීන් 5.6g ක් අන්තර්ගතයි.ඒ වගේම කාබෝහයිඩ්‍රේට් 12.1g, තන්තු 8.5gක් අන්තර්ගතයි. මීට අමතරව විටමින් සහ ඛනිජ ලවණ වලිනුත් කොස් ඇට අනූනයි. අපි කොස් ඇට අග්ගලා හදාගන්න පොල් එකතු කරන නිසා මේදයත් අපේ ශරීරයට හම්බෙනවා.

ඉතින් හැමෝටම සල්ලි අමාරු මේ කාලේ අනවශ්‍ය අමතර කෑම වලට සල්ලි වියදම් නොකර මේ වගේ පෝෂණය සපිරි, ලාභදායි, පහසුවෙන් හදාගන්න පුළුවන් කෑම වලට යොමු වීමෙන් දරුවන්ගේ පෝෂණයටත් ගෙදර ආර්ථිකයටත් යහපත් ප්‍රතිඵල අත් කරගන්න පුළුවන්

செய்முறை:

பலா மரத்தை சோற்றிற்கு வர்ணித்து கூறுவார்கள். ஏனெனில், பலா மரத்தில் பல உணவு வகைகளை செய்ய முடியும் என்பதாலாகும்.

பலா விதைகளில் இருந்து பலாவிதை உருண்டை செய்யலாம் அத்தோடு  இது ஒரு சுவையான உணவாகும். பொதுவாக, பலாப்பழத்தில் 100 முதல் 200 விதைகள் இருக்கும், எனவே இதை முன்கூட்டியே பதப்படுத்தி வைத்துகொள்ளவதற்காகவும் இந்த முறையினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

 செய்முறையும். மிகவும் எளிமையானது. சிறிதளவு  பலா விதைகளை எடுத்து  பொன்னிறமாக வறுக்கவும். அதன் பிறகு, சூடு குறைந்ததும், தோல்களை எளிதில் சுத்தம் செய்யலாம். அடுத்ததாக ஒரு உரல் அல்லது கிரைண்டர் மூலம் சிறிய துண்டுகளாக உடைத்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு, தேவையான அளவு சீனி சேர்த்து துருவிய தேங்காயுடன் கலக்க வேண்டும்.தேவைப்பட்டால், நீங்கள் சிறிது மிளகு மற்றும் உப்பு சேர்க்கலாம். உருண்டைகளை  போல் செய்து  பரிமாறுவது எளிதாகும்.

இந்தப் படத்தில், பலாப்பழம் அதிகமாக இருந்த காலத்தில் வீட்டில் செய்த சில பலா விதை உருண்டைகளே காணலாம். மேலும் கடாயில் வறுக்க கடினமாக இருந்தால், பலாவிதைகளை அடுப்பில் சுட்டு எடுக்கலாம்  அல்லது வேகவைத்தும் உருண்டைகளாக செய்யலாம்.

இலங்கை மருத்துவ பரிசோதனை அறிக்கை  2021  தரவுகளின்படி, 100 கிராம் பலாவிதையில் 5.6 கிராம் புரதம் உள்ளது. மேலும் இதில் 12.1 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 8.5 கிராம் நார்ச்சத்துடன் பலாவிதைகளில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் நிறைந்துள்ளன. பலாவிதை உருண்டை தயாரிக்கும் போது  தேங்காய் சேர்ப்பதால் கொழுப்பும் நம் உடலில் சேர்க்கப்படுகின்றது .

எனவே, எல்லோருக்கும்  இக்காலத்தில் பணம் கஷ்டமாக இருக்கலாம், போசணையற்ற அனாவசியமான உணவுகளுக்குச் செலவழிக்காமல், இதுபோன்ற சத்தான, மலிவான, சுலபமாகத் தயாரிக்கும் உணவுகளைக் தெரிவு செய்ய பழகிக்கொள்வதால், குறிப்பாக  குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கும், வீட்டுப் பொருளாதாரத்திற்கும் நல்ல பலன்களைப் பெற்றுத்தரும்.

Scroll to Top